என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » மாணவன் உதவி
நீங்கள் தேடியது "மாணவன் உதவி"
கேரள வெள்ள நிவாரண நிதிக்கு உண்டியல் பணம் ரூ. 5,000 ரூபாயை மாணவன் வழங்கினான். இதை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர். #keralaflood
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி ஜக்கப்பன் நகரைச் சேர்ந்தவர் முன்னாள் எம்.பி., பெருமாள். இவரது மகன் கார்த்திகேயன், 10. இவர் தனியார் பள்ளி ஒன்றில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். கார்த்திகேயன் சென்ற ஆண்டு தனது பிறந்த நாளைக்கொண்டாடினார்.
அப்போது அவருக்கு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஐந்தாயிரம் ரூபாய்க்கு மேல் பரிசாக பணத்தை கொடுத்துள்ளனர். இந்த பணத்தை கார்த்திகேயன் சேமித்து வைத்திருந்தார். இந்த நிலையில் தற்போது கேரளாவில் பெய்த மழையால் பெரும் சேதம் ஏற்பட்டு பலர் இறந்த நிலையில், லட்சக்கணக்கானோர் வீடுகள் மற்றும் உடமைகளை இழந்துள்ளனர்.
இவர்களுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து உதவிகள் செய்து வருகின்றனர். இவற்றை அறிந்த மாணவன் கார்த்திகேயன் தனது சேமிப்பு பணம் ஐந்தாயிரம் ரூபாயை கேரள வெள்ள நிவாரண நிதிக்காக வங்கி வரைவோலையாக எடுத்து கேரள முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்காக அனுப்பி வைத்தார். சிறுவனின் இச்செயலை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர். #keralaflood
×

X